சிறிலங்காவின் அரசின் இன அழிப்பின் தொடர்ச்சியாக யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றமையைக் கண்டித்து கனடாவில் கண்டன வாகனப் பேரணிகள் நடைபெறவுள்ளன.
கனடியத் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து இந்த கண்டன வாகனப் பேரணிகளை ஏற்பாடு செய்யதுள்ளன.
பிராம்ப்டனில் இருந்தும் ஸ்கார்போர்க்விலும் இருந்தும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு இந்த இரண்டு பேரணிகளும் ஆரம்பமாகவுள்ளன.
இப்பேரணியில் அனைத்து தமிழின உறவுகள், அமைப்புக்கள், ஊர்சங்கங்கள் இப்பேரனியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.