கியூபெக்கில் இன்று இரவு எட்டு மணி முதல் முழுநேர ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.
இந்த ஊரடங்கானது எதிர்வரும் ஒருமாத காலத்திற்கு அமுலில் காணப்படவுள்ளது. கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமான அதிகரிப்பில் இருந்ததன் காரணமாகவே மாகாண அரசு இவ்வாறான முடிவினை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 3ஆயிரத்து 127பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.