லடாக்கின் கிழக்கு எல்லையில், சீன இராணுவ வீரர் ஒருவரை, இந்தியப் படையினர் கைது செய்துள்ளனர்.
லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில், நேற்று அதிகாலை, சீன இராணுவ வீரர் ஒருவர் எல்லை தாண்டி வந்த போது, இந்திய படை வீரர்கள், அவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
வழக்கமான நடைமுறைப்படி, சீன வீரர் பிடிபட்ட விவகாரம் கையாளப்பட்டு வருவதாகவும், இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.