கனடாவில் கடந்த டிசம்பர் மாதம் 63ஆயிரம் வேலை இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வேலை இழப்பானது 8.6சதவீதமாக காணப்படுவதாகவும் இது கடந்த மாதத்தினை விடவும் அதிகமாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவில் கடந்த பெப்ரவரி மாதம் 5.6சதவீதமாக காணப்பட்டதோடு, மே மாதமளவில் 13.7சதவீதமாக காணப்பட்டது.
ஒன்ராரியோ, கியூபெக் மாகாணங்களில் முடக்கல் நிலைமை அறிவிக்கப்பட்டமை இந்த வேலைஇழப்புக்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.