அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலககாரர்களை தூண்டி விட்டுள்ளார் என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இத்தகைய செயலாளது, ஜனநாயகத்திற்கு எதிரான கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் ஆணையை மதிக்கவல்ல மனநிலையில் ஆட்சிப்பொறுப்பில் உள்ள ட்ரம்ப் இருக்க வேண்டியது மிகவும் கட்டாயமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகத்தின் இருப்பிடத்தில் வன்முறைகள் நிகழ்ந்துள்ளமை கவலையையும் ஆழ்ந்த கரிசினையையும் கொள்ளச் செய்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.