நிலத்துக்கு அடியிலான சுரங்கப் பாதையில் ஏராளமான அதிநவீன ஏவுகணைகளை வைத்திருக்கும் படங்களை ஈரானிய அரசு வெளியிட்டுள்ளது.
பிரமாண்டமான அந்த சுரங்கப் பாதையில் பெருமளவு பாரஊர்திகள் மற்றும் அதிலிருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், பல நூறு கிலோமீற்றர் வரை சென்று போர் கப்பலைத் தகர்க்கக் கூடிய ஏவுகணைகளும், காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஹோர்முஸ் (Hormuz ) நீரிணையை கடந்து செல்லும் அமெரிக்கா உள்ளிட்ட எத்தகைய போர்க் கப்பலையும் தாக்கும் வல்லமை இந்த ஏவுகணைகளுக்கு இருப்பதாக ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் ஈரான் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களைக் காட்சிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது ஏவுகணைகளைக் காட்சிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.