இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் இராணுவ விபச்சார விடுதிகளில் பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பெண்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தென் கொரிய நீதிமன்றம் ஜப்பானுக்கு உத்தரவிட்டது.
அதன்படி ஜப்பானிய அரசாங்கத்திற்கு 91 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் உயிர் பிழைத்த ஒவ்வொரு பெண்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் செலுத்துமாறு சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில் அமெரிக்க நட்பு நாடுகளுக்கிடையே பதற்றத்தை தூண்டும் முக்கிய முடிவாக இது கருதப்படுகிறது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜப்பானின் வெளியுறவு அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரியான டேகோ அகிபா (Togo Akiba), தென் கொரிய தூதர் நம் குவான்-பியோவை (Num Quan-Pio) அமைச்சுக்கு வரவழைத்து எதிர்ப்புத் தெரிவித்ததுடன், இந்த தீர்ப்பு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவரிடம் கூறினார்.
ஜப்பானிய இராணுவத்தினருக்கான போர்க்கால பாலியல் அடிமைகளால் டோக்கியோவுக்கு எதிராக தென் கொரியாவில் நடந்த முதல் சிவில் சட்ட வழக்கு இதுவாகும்.