நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் பற்றிய மீளாய்வு செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் செயற்பாடுகளை மாகாண அரசுகளின் கீழாக சுயாதீனமான குழுவொன்றால் மேற்கொள்வதற்கு சமஷ்டி அரசு திட்டமிட்டு வருகின்றது.
அண்மைய நாட்களில் நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் சிறைக்கூடங்களுக்கு நிகராக இருப்பதாக கூறி மனித உரிமை ஆர்வலர்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன், கொரோனா பரவலை தடுக்கும் விடயத்தில் நீண்டகால பராமரிப்பு இல்லங்கள் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.