முன்களப்பணியாளர்களுக்காக இலவச குழந்தை பாராமரிப்பு சேவையை வழங்கவுள்ளதாக ஒன்ராரியோ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த சேவை எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் நீடிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படவுள்ளது.
ஒன்ராரியோவில் 3ஆயிரத்து 443பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறிப்பட்டுள்ள நிலையில் 40பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், முன்களப்பணியாளர்களின் காத்திரமான பணிகளை கருத்திற்கொண்டோ இத்தகைய இலவச அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.