ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவின் போது கலவரம் இடம்பெற வாய்ப்புள்ளதால் வொஷிங்டனில் 15 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் வரும் 20-ம் திகதி பொறுப்பேற்கவுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டது போல, ஜோ பைடன் பதவி ஏற்கும் போதும், ட்ரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக, வொஷிங்டனில் 15 நாட்களுக்கு அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை வொஷிங்டன் நகர முதல்வர் வெளியிட்டுள்ளார்.