பாலக்கோட்டில், இந்திய வான்படை நடத்திய தாக்குதலில், 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்று பாகிஸ்தான் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
2019ஆம் ஆண்டு புல்வாமாவில், நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில், 40 இந்தியப் படை வீரர்கள் பலியாகியதை அடுத்து, இந்திய வான்படையின் வானூர்திகள், பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் தாக்குதல் நடத்தியிருந்தன.
இந்த தாக்குதலில் ஒருவர் கூட பலியாகவில்லை என்று, பாகிஸ்தான் கூறி வந்தது.
இந்தநிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் தூதரக அதிகாரி ஆஹா ஹிலாலே, தொலைக்காட்சி ஒன்றில் கருத்து வெளியிடுகையில், பாலகோட்டில், இந்திய வான்படை நடத்திய தாக்குதலில், 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளார்.
யாரும் பலியாகவில்லை என அப்போது கூறியது பொய் என்றும், எல்லையில் நிலைமை மோசமாகி விடக்கூடாது என்பதற்காகவே அவ்வாறு கூறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.