ரஜினியை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ரஜினி ரசிகர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியலுக்கு வரும் முடிவில் இருந்து ரஜனிகாந்த் பின்வாங்கியதை அடுத்து, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு, ரஜினியை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுப்பதென அவரது ரசிகர்கள் முடிவு செய்திருந்தனர்.
இதற்கு ரஜினி மக்கள் மன்ற மாநில தலைமையும் மாவட்ட செயலாளர்களும், தடைவிதித்திருந்தனர்.
ரஜினியை அரசியலுக்கு வர வலியுறுத்தி யாரும் போராட்டம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை மீறி, ரஜினி ரசிகர்கள் இன்று நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரஜினி ரசிகர்கள் இந்த அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.