சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது கீச்சகப் பக்கத்தில் ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 10 நாட்களில், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சுகாதார அதிகாரிகளின் அறிவுரையைப் பின்பற்றி தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரது தனிப்பட்ட செயலாளருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுடன் நெருங்கிப் பழகிய 118 பேரை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.