அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனங்காணப்பட்டு அவர்களில் பெரும்பாலானோருக்கு இன்று பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போதே, அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா அச்சுறுத்தலால் அடுத்த வாரம் நடைபெறவிருந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றக் கூட்டத்துக்கு முன்னர், உறுப்பினர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது.