இந்தோனேசியாவில் 62 பயணிகளுடன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிய விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜகார்த்தாவில் இருந்து, நேற்று மதியம் புறப்பட்ட இந்த விமானம், 44 நிமிடங்களில், கட்டுப்பாட்டுக் கோபுரத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
திடீரென மாயமான விமானம், ஜாவா கடல் பகுதியில் விழுந்து விபத்திற்குள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த கடல் பகுதியில், விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது, விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதிலிருந்து சமிக்ஞைகள் கிடைத்து வருகின்றன.
இந்த நிலையில், கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக்கைகளில், மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.