வவுனியாவில் இளம் குடும்பத் தலைவர் ஒருவர், துப்பாக்கி சூட்டு காயங்களுடன் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா- அரசமுறிப்பு பகுதியைச் சேர்ந்த, 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவரே துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன், வவுனியா மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
கணவன் – மனைவிக்கு இடையில் இடம்பெற்ற சண்டையின் போது, பெண்ணின் உறவினர் ஒருவரே, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து, தகவல் அறிந்த ஒமந்தை காவல்துறையினர், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அத்துடன், சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து, நாட்டு துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.