அரசியலுக்கு வருமாறு போராட்டம் நடத்தி, தன்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று, நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“அரசியலுக்கு வருமாறு வலியுறுத்தி, தலைமையின் உத்தரவையும் மீறி சென்னையில் போராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது.
ஏன் அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே, விரிவாக விளக்கியுள்ளேன்.
இதற்கு பின்னரும், நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம், வற்புறுத்த வேண்டாம்” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.