கிளிநொச்சியில் பெய்து வரும் அடைமழையால், இரணைமடுக் குளம் உள்ளிட்ட நீர்ப்பாசனக் குளங்கள் நிரம்பி வழிவதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இணைமடுக் குளம் 3 அடி வான் பாய்வதாகவும், இதனால், அதன் 14 வான் கதவுகளும் 12 அங்குலத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, கல்மடு குளம் , பிரமந்தனாறு குளம், கனகாம்பிகை குளம், அக்கராயன்குளம், கரியாலை நாகபடுவான் குளம், புதுமுறிப்பு குளம், குடமுருட்டிகுளம், வன்னேரிக்குளம் ஆகியனவும் வான் பாய்ந்து வருகின்றன.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், குறித்த குளங்களின் கீழ் உள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.