வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் தூபிகள் எங்கெல்லாம் உள்ளனவோ, அவை முற்றாக இடித்து அழிக்கப்பட வேண்டும் என்று, சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில், அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தூபிகள் அமைப்பதோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தி நினைவேந்துவதோ, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும் என்றும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டும் என்றும், அவர் தெரிவித்தார்.