முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிப்பதாக, டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காவில் தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், தமிழ் மக்கள் இலங்கையில் சிங்கள மக்களோடு சமத்துவத்தோடு சகஜமான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றும், இந்தியாவில் உள்ள ஜனநாயக, மதசார்பற்ற சக்திகள் குரல் கொடுக்க வேண்டும் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.