ரொரன்ரோவில் Annex பகுதியில் உள்ள நீண்டகால பராமரிப்பு இல்லத்தின் முன்பாக, அங்குள்ளவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பராமரிப்பு இல்லத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தப் போராட்டம் இடம்பெற்றுள்ளது.
டிசெம்பர் மாதத்துக்குப் பின்னர் இங்கு 146 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் இவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
நேற்றைய நிலவரங்களின்படி, 46 பேர் தொற்றுடன் இருப்பதாகவும், அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.