மட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 11வயது சிறுமியின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நிலையில், சிறிய தாயின் வீட்டிலேயே சிறுமி தங்கியிருந்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறுமி தாக்கப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, கிராம சேவகரினால் மீட்கப்பட்டு கல்லாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கிருந்த சிறுமியை சிறிய தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்த நிலையிலேயே, நேற்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் மரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.