யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், சிறிலங்கா தூதரகத்தை முற்றுகையிட்டு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 15ற்கும் மேற்பட்ட கட்சிகள், அமைப்புக்களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, சிறிலங்கா தூதரகத்தை முற்றுகையிட முனைந்த வைகோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.