யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின் போது, வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் இன்று 391 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களில், வவுனியா பொது மருத்துவமனை வெளிநோயாளர் பிரிவில் பரிசோதிக்கப்பட்ட ஈச்சங்குளம் மற்றும் கெப்பிட்டிக்கொலாவ பகுதியைச் சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வவுனியா- பட்டாணிச்சூர் பகுதியைச் சேர்ந்த, வவுனியா நகர வர்த்தகர்கள் 6 பேருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.