அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூதுவர் ரவிநாத ஆரியசிங்க மற்றும் தூதரக பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே, கடந்த 4ஆம் நாளில் இருந்து வொசிங்டனில் உள்ள சிறிலங்கா தூதரகம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
ஏனைய தூதரகப் பணியாளர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதும், அவர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.