அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடன், அடுத்த மாதம் முடிவுறவுள்ள ரஷ்யா-அமெரிக்காவுக்கு இடையிலான முக்கிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை நீடிப்பார் என எதிர்பார்ப்பதாக சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவரான மைக்கேல் கோர்பச்சேவ் (Michael Gorbachev) கூறியுள்ளார்.
ரஷ்யாவின் RIA செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் கருத்துத் தெரிவித்த அவர், இந்த முக்கிய ஒப்பந்தத்தில் ஜோ பைடனை நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஆணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் உலகின் இரண்டு பெரிய அணுசக்தி சக்திகளைக் கொண்டிருக்கக்கூடிய இந்த இரு நாடுகளின் மூலோபாய அணு ஆயுதங்கள், பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் கனரக குண்டுவீச்சாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகிறது. அத்தோடு உலகளாவிய ஆயுதக் கட்டுப்பாட்டின் மூலக்காரணியாக இது கருதப்படுகிறது.