யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டதற்கு, கனடிய வெளிவிவகார அமைச்சர் பிரான்கோய்ஸ் – பிலிப் ஷம்பெயின் (Francois – Philip Champagne) கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமது கீச்சகப் பக்கத்தில் இது தொடர்பான பதிவு ஒன்றை அவர் இட்டுள்ளார்.
அதில், “2009 ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் பொதுமக்களுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டதைக் கேட்டு இதயம் நொருங்கியது.
புரிந்து கொள்வதற்கும், நல்லிணக்கத்தை நோக்கி நகர்வதற்கும் நினைவுகூரல் முக்கியமானது.” என்றும் கனடிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.