அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் பதவியை பறிப்பதற்கான நடவடிக்கையை நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி (nancy Pelosi) ஆரம்பித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் தனது ஆதரவாளர்களைத் தூண்டி விட்டு, தாக்குதலை, நடத்தியதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாட்டின் ஜனாதிபதியே கலவரத்தை தூண்டியதால் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதற்கு டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த 2 செனட் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையிலேயே ட்ரம்பின் பதவியை பறிக்கும் நடவடிக்கையை சபாநாயகர் நான்சி பெலோசி (nancy Pelosi) தொடங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் உடல்நிலை மோசமாக இருந்தாலோ, அதிகார துஷ்பிரயோகம் செய்தாலோ அவரை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் துணை ஜனாதிபதிக்கு உள்ளது.
எனினும் அவரை பதவி நீக்கம் செய்வதற்கு, நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இதற்காக, நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டுவதற்கு, சபாநாயகர் நான்சி பெலோசி (nancy Pelosi) அழைப்பு விடுத்துள்ளார்.