வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தைலாபுரம் இல்லத்தில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோர் இன்று சந்தித்து பேசியுள்ளனர்.
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தமிழக அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தைலாபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்கள்.
அவர்களுடன் வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டும் தான் பேசப்பட்டது. அரசியலோ, தேர்தல் குறித்தோ பேசப்படவில்லை.
வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.