தமிழினத்திற்கு எதிராக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் மட்டுப்படுத்தாது, அதனை அதற்கு அப்பால், அதாவது சர்வதேச குற்றவியல் நீதின்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.
அதேநேரம் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற அவசியமாகும். அதிலிருந்து எந்த ஆட்சியாளர்களாலும் விலகிச் செல்ல முடியாது.
பொறுப்புக்கூறல் செய்யப்படாது நல்லிக்கணம் சாத்திமே இல்லை. இதற்கான அழுத்தங்கள் எதிர்வரும் காலங்களில் மேலும் வலுவடையும் இந்த விடயங்களை அரசாங்கத்திடம் திடமாக எடுத்துக்கூறும்படியும் அவர் எடுத்துரைத்துள்ளார்.
சிறிலங்காவுக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கருக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமத்துக்கும் இடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த விடயங்களை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.