ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலேயே சிறிலங்கா உயர்நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இலங்கையின் பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள், ஊழல் மிக்கவர்கள் என்று ரஞ்சன் ராமநாயக்க, 2017ஆம் ஆண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதன் மூலம் இலங்கையின் நீதித்துறையை அவமதித்து விட்டார் என உயர்நீதிமன்றத்தினால், குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள், சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.