யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகததில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமையைக் கண்டித்து இன்று வடக்கு கிழக்குத் தழுவிய பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டது.
இதனால் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களும் இன்று காலை முதல் மாலை 6 மணிவரையில் வெறிச்சோடிக்கிடந்ததோடு மக்கள் நடமாட்டமும் அற்றநிலையிலேயே இருந்தது.
இந்த முழு அடைப்புப் போராட்டதுக்குப் அத்தியாவசியத்துறையினர் தவிர்ந்த பல்வேறு தனியார் துறையினரும் ஆதரவு தெரிவித்த நிலையில் வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து வர்த்தக சங்கங்களும் இந்தப் போராட்டதுக்கு ஆதரவு வழங்கியிருந்தன.
தனியார் போக்குவரத்துத் துறையினரும் இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்ததோடு சாதாரண போக்குவரத்தும் சொற்ப அளவிலேயே இருந்தது.
இந்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் முழுமையான ஆதரவை வழங் கியிருந்த நிலையில் சிறுபான்மை மக்களைக் கிள்ளுக்கீரைகளாக நினைத்து – சிறுபான்மை மக்களை நசுக்கும் கோத்தபாய அரசுக்கு எமது எதிர்வினையை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.