அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பை பேணிய 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 15 நாடாளுமன்ற அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளையும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் கண்டிப்பாக பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டுமென சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து பாராளுமன்றத்தை தொற்றுநீக்கள் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.