உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்த ஆரம்பித்தாலும் இந்த வருடம் பெருமளவு மக்களிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கப்போவதில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்திலும் நாடுகளும் மக்களும் சமூகவிலக்கல் நடவடிக்கைகளையும் நோயை கட்டுப்படுத்துவதற்கான ஏனைய நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் மருந்துகள் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களிற்கு பாதுகாப்பை வழங்கினாலும் 2021இற்கு மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பெறும் நிலையை நாங்கள் அடையப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
சில நாடுகள் சில பகுதிகளில் தடுப்பூசி வழங்கப்பட்டாலும் முழு உலகையும் பாதுகாக்க முடியாத நிலைமை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.