ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, பொதுச் செயலாளராக இருந்த அகில விராஜ் காரியவசம், கட்சியின் புதிய உதவித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாலித ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராகவும், வஜித அபேவர்த்தன கட்சியின் புதிய தவிசாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதி தலைவராக ருவன் விஜேவர்த்தனவும் நீடிப்பர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிகொத்தாவில் இன்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.