உலக நாடுகள் கொந்தளிப்பான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில், சீனாவுக்கு மட்டும் சாதகமாக நிலை உள்ளதாக சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங் (xi jinping ) தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பீஜிங்கில், கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த, 100 ஆண்டுகளில், வரலாறு காணாத வகையில் கொரோனாவின் தாக்கத்தால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொருட்கள் விநியோகம் தடைப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளுடனான நல்லுறவு சீர்கெட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதற்கும் மத்தியில் சீனாவுக்கு மட்டும், காலமும், நேரமும் சாதகமாக உள்ளது.
வரும் ஆண்டுகளில், சீன மக்கள் மிகப் பெரிய மாற்றத்தை சந்திக்கப் போகின்றனர். சீனா, மிகவும் வலிமையான , பணக்கார நாடாக மாறும்.
ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சிக்கு பதிலாக, உள்நாட்டு நுகர்வை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.