ரோயல் மவுண்ட் காவல்துறையினர் தமது உடலில் அணிந்துள்ள கமராக்களை எக்காலப்பகுதியில் அணைக்க முடியும் என்பது தொடர்பான தெளிவான வழிகாட்டுதல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
19ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை கொண்ட தொழிற்சங்கமொன்றே இந்த விடயத்தினை தற்போது முன்வைத்துள்ளது.
இதுபற்றிய தெளிவான வழிகாட்டுதல் அவசியமானது என்றும் அவ்வாறான வழிகாட்டுதல்கள் இல்லாது தொழில்முறைக் கடமைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்து.
மேலும் காவல்துறையின் அதிகளவிலான வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறலுக்கும் இந்த வழிகாட்டல் அவசியமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.