வோஷிங்டனில் வரும் 24 ஆம் திகதி வரை அவசரகால நிலையை நடைமுறைப்படுத்துவதற்கு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள 20ஆம் திகதி ஆயுதங்களுடன் போராட்டம் நடத்த வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையிலேயே, வோஷிங்டனில் அவசரநிலையை அறிவித்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, புதிய ஜனாதிபதி பதவியேற்புக்கு முன்னதாக, ட்ரம்ப்பை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளில் ஜனநாயக கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றம் இன்று கூடி ஜனாதிபதியின் அதிகாரங்களை பறிக்கும் 25-வது சட்ட திருத்தம் குறித்து, முடிவெடுக்கவுள்ளது,
ட்ரம்பை பதவி நீக்கும் தீர்மானத்தின் மீது நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.