‘பிரவுட் பாய்ஸ்’ (PROUD BOYS) குழுவை அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்ப்பது குறித்து அரசாங்கம் பரீசிலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் (BIL BLAR) தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பானது, வெள்ளை மேலாதிக்கக் கருத்துக்களை ஊக்குவிக்கும் வலதுசாரி தீவிரவாதக் குழு என பரவலாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. கருத்தியல் ரீதியாக ஊக்கமளிக்கும் வன்முறை தீவிரவாதிகள் குறித்து நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம்.
ஆகவே அந்தக் கழுவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். வெகுவிரைவில் அந்தக்குழு தொடர்பிலான தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.