2022ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் வகையில் சமஷ்டி அரசாங்கம் முடிவெடுப்பதனை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கங்களுக்கு இடையிலான பேச்சுகள் மூலம் பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயங்களை கனடிய ஒலிம்பிக் சபை வெளியிட்டுள்ளதோடு, அந்தப் போட்டிகளில் பங்கேற்பதற்கான தயார்ப்படுத்தல்கள் நடைபெறுவதாகவும் கூறியுள்ளது.
மேலும், விளையாட்டுப்போட்டிகளை புறக்கணிப்பது, பிரச்சினைகளுக்கான தீர்வினை தராது என்றும் அது முறையற்ற அணுகுமுறை என்றும் அச்சபை கூறியுள்ளது.