தமிழர் திருநாளான தைப்பொங்கல் விழாவைக் கொண்டாடும், தமிழர்களுக்கு பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
கீச்சகத்தில் அவர் தனது வாழ்த்துக்களை காணொளியில் வெளியிட்டுள்ளார்.
அதில், வணக்கம், பிரித்தானிய தமிழ் சமூகத்தினர் அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள் என்று தொடங்கி, தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.
அத்துடன், தற்போதைய கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பிரித்தானிய தமிழ் சமூகம் ஒழுக்கத்துடனும், அர்ப்பணிப்புடனும் மேற்கொள்ளும், ஒத்துழைப்பையும் பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாராட்டியுள்ளார்.
அத்துடன், இன்றையதினம் தைப்பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உலகெங்கிலும் வாழும், அனைத்து தமிழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.