இன்று தைத் திங்கள் முதலாம் நாளாகும்.
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பெரு நம்பிக்கை. அந்த வகையில் பிறக்கும் தமிழ் புத்தாண்டும் இயல்புநிலை திரும்பிட வழியமைத்திடும் என்ற பிரார்த்தனைகளை செய்திடுவோம்.
நன்றிசெலுத்தல் மரபை அடியொற்றிய தைப்பொங்கல் நிகழ்வுகள் உலகெல்லாம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கனடிய வானொலியும், தனது விளம்பரதாரர்கள், நேயர்கள் உட்பட தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கலை கொண்டாடிக்கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.