ஒன்ராரியோவில் முககவச ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டவர்களில் இருவருக்கு எதிராக பெருந்தொகையான அபராதம் விதிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு அபராதம் விதிக்கப்படுமாக இருந்தால ஒருவருக்கு ஆகக்குறைந்தது 10ஆயிரம் டொலர்கள் அபராத தொகையாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3 மற்றும் ஜனவரி 10 ஆகிய திகதிகளில் ஒன்ராரியோவின் இருவேறு இடங்களில் நடைபெற்ற முக கவச எதிர்ப்பு போராட்டங்களில் ஒன்றில் 60பேர் வரையிலும் மற்றொன்றில் 40பேர் வரையிலும் பங்கேற்றிருந்தனர்.
இவர்கள் முறையான சமூக இடைவெளிகளை பின்பற்றவில்லை மற்றும் கொரொனா பாதுகாப்பு விதிமுறைகளை புறக்கணித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் போராட்டங்களின் ஏற்பட்டாளர்களுக்கே தற்போது இவ்வாறு அதிகளவு அபராதத்தொகை அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.