தாம் மொஸ்கோவுக்குத் திரும்பவுள்ளதாக ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர், அலெக்சி நவல்னி (Alexei Navalny) தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக எதிர்த்து வரும், அலெக்சி நவல்னி (Alexei Navalny) கடந்த ஓகஸ்ட் மாதம் சைபீரியாவில் இருந்து விமானத்தில் திரும்பும் போது, விசமூட்டப்பட்டு ஆபத்தான நிலையில், ஜேர்மனிக்கு கொண்டு செல்லப்பட்டு உயிர் பிழைத்தார்.
இந்த தாக்குதலை ரஷ்ய புலனாய்வுப் பிரிவினரே மேற்கொண்டனர் என்று புலனாய்வு ஊடகங்கள் குறிப்பிடுகின்ற போதும், ரஷ்ய ஜனாதிபதி புடின் அதனை முற்றாக மறுத்து வருகிறார்.
இந்த நிலையிலேயே, வரும் 17ஆம் திகதி ரஷ்யாவுக்குத் திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டை பெற்றிருப்பதாக அலெக்சி நவல்னி (Alexei Navalny) தெரிவித்துள்ளார்.