உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சமரச குழுவை ஏற்க மறுத்துள்ள விவசாயிகள், போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண்மை சட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு தடைவிதித்துள்ள உச்சநீதிமன்றம், விவசாயிகளுடன் பேசி தீர்வு காண்பதற்கு 4 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது.
ஆனால், 4 பேர் கொண்ட குழுவை ஏற்க முடியாது என்றும், இந்த குழுவில் இடம்பெற்றுள்ள 4 பேருமே விவசாய சட்டங்களுக்கு ஆதரவாக இருந்தவர்கள் என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த குழுவை ஏற்கவோ, அதனை சந்திக்கவோ மாட்டோம் எனத் தெரிவித்துள்ள விவசாய அமைப்புகள், திட்டமிட்டபடி தமது போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்துள்ளன.