கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என்று, யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக திருவிழாவை நடத்துவதை தவிர்க்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுவேளை, அரசாங்க, கடற்படை மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக த யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவில், தமிழகத்தில் இருந்தும், இலங்கையில் இருந்தும் பக்தர்கள் ஒன்று கூடுவது வழக்கமாகும்.
தற்போது, இரண்டு நாடுகளிலும் கொரோனா தொற்று பரவியிருப்பதால், இம்முறை திருவிழா நடத்துவதை தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.