ஒன்ராரியோவில் அறிவிக்கப்பட்டுள்ள வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்கும் உத்தரவு அமுலாக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் மாகாணம் முழுவதும் விசேட காண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவோ அல்லது மிகமிக தேவையானதொரு பயணத்தினை மேற்கொள்வதற்கோ மட்டுமே வெளியில் நடமாட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் மாகாணத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாகவும், கணிசமான அளவிலும் உள்ளதன் காரணத்தினால் அதனை கட்டுப்படுத்துவதற்காக இறுக்கமான வரைமுறைகள் பின்பற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.