காலநிலை மாற்றம், தடையற்ற வர்த்தகம் போன்ற விடயங்களில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் உலகத்துடன் இணைந்து கொள்வார் என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்தார்.
ரொய்ட்டஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
உலக நாடுகளுடனான அமெரிக்க இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளமை பகிரங்கமான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அயல் நாடு என்ற வகையில் கனடா அமெரிக்காவுடனான உறவுகளை சீரானதாக பேணி வருவதாகவும் அவர் கூறினார்.
புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்கவுள்ளமைக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, அவருடைய காலத்தில் உலகத்துடன் அமெரிக்க மீண்டும் இணைந்து கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.