தொடர்மழையினால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில், கடந்த மூன்று தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
மாஞ்சோலை தோட்டத்தில், நேற்று மட்டும் 517 மில்லி மீற்றர் மழை கொட்டித் தீர்த்துள்ளது.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்வதால் அணைகள் நிரம்பி, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துப் பாய்கிறது.
தாமிரபரணி ஆற்றில் நேற்று செக்கனுக்கு 60 ஆயிரம் கனஅடிநீர் பாய்ந்ததாக தகவல்கள் கூறுகின்ற்றன.
தாமிரபரணியில் கடந்த சில தினங்களாக செல்லும் வெள்ளநீரால் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி, ஆத்துார், ஏரல், புன்னக்காயல் உள்ளிட்ட இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால், தாமிரபரணிக் கரையோரங்களில் வசிக்கும் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.