தொற்று நோயை கையாள்வது மிகவும் கடுமையான பணியென்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், மானிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், பொருளாதார திட்டங்களை வகுத்தாலும், கொள்ளை நோயை கட்டப்படுத்துவது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும் கூறினார்.
மேலும், அண்மைய காலத்தில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு தான் திட்டமிடவில்லை என்றும், சிறுபான்மை அரசாங்கமே ஆட்சியில் இருப்பதால் தாராளாவாதிகள் புதிய பலமான அரசாங்கத்தினை அமைப்பதற்காக தேர்தலை எதிர்பார்த்துள்ளனர் என்றும் கூறினார்.